முதல் பக்கம் தொடர்புக்கு


பசு மாடு மற்றும் எருமைகளைத் தாக்கும் ஒட்டுண்ணி நோய்கள்  

அனபிளாஸ்மோஸிஸ்        

   இந்நோயினைப்பற்றி

   நோயின் தன்மை  
  • ரிக்கெட்சியா எனும் நுண்ணுயிரியால் ஏற்படும் இந்த நோய் அசைபோடும் விலங்குகளைப் பாதிக்கும் ஒரு முக்கியமான நோயாகும்
  • கலப்பின மற்றும் வெளிநாட்டின மாட்டினங்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன

    இந்நோய்க்கான காரணங்கள்
  • இந்நோய் அனபிளாஸ்மா மார்ஜினேல் எனும் ரிக்கெட்சிய நுண்ணுயிரியால் ஏற்படுகிறது
  • இந்த நோயக்கிருமிகள் இரத்த சிவப்பணுக்களின் உள்ளே இருக்கும்
  • இந்நோய்க்கிருமிகள் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், 60 நிமிடம் இருந்தால் இறந்துவிடும்

   நோய் பரவும் முறை  
  • இந்நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் உண்ணிகளின் மூலம் பரவுகின்றன
  • உண்ணிகள் மட்டுமன்றி டபானஸ், ஸ்டொமாக்சிஸ் இனத்தைச் சேர்ந்த பூச்சிகளும், கொசுக்களும் இந்த  நோய்க்கிருமியைப் பரப்புவதில் முக்கியபங்கு  வகிக்கின்றன
  • இந்நோய் தாங்கிகளாகச் செயல்படும் மாடுகள் மற்றும் காட்டில் வாழும்  அசைபோடும்   பிராணிகள் போன்றவை இந்நோயினைப் பரப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றன
  • கொம்புநீக்கம்,ஆண்மை நீக்கம்,தடுப்பூசிஅளித்தல்,காதுகளில் அடையாளத் துளைபோடுதல் போன்ற மேலாண்மை  முறைகள் மூலமாகவும்இந்நோய்க்கிருமி பரவுகிறது
  • தாய் மாடுகளிலிருந்து நஞ்சுகொடி வழியாக கன்றுகளுக்கு இந்நோய் பரவுகிறது

  அறிகுறிகள்

   நோயின் அறிகுறிகள்  
  • அதிக காய்ச்சல்
  • உடல் நிலை பாதிக்கப்படுதல்
  • மூக்கிலிருந்து சளி வடிதல், கண்ணில் இருந்து நீர் வடிதல்
  • தீவனம் எடுக்காமை
  • இருமல் மற்றும் மூச்சு விடும் போது சத்தம் கேட்டல்
  • மாடுகளி்ன் முன்வயிறு இயங்காமை, உடலில் தண்ணீர் அளவு குறைதல்,தோல் வறண்டு காணப்படுதல், மூச்சுவிடசிரமப்படுதல், தசைகளின் நடுக்கம்
  • உடலில் மேற்புறத்தில் காணப்படும் நீணநீர்க்கட்டிகளின் வீக்கம்
  • பற்களை கடித்தல்
  • கண்கள் மற்றும் வாய், பிறப்புறுப்பின் உட்சவ்வுகள் வெளிறிக் காணப்படுதல்

   மேலாண்மை முறைகள்

   நோய்த்தடுப்பு முறைகள்  
  • தகுதி வாய்ந்த கால்நடைமருத்தவரால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவேண்டும்
  • பூச்சிகள் மற்றும் புற ஒட்டுண்ணிகளின் தாக்கத்தை குறைப்பதற்கு மருந்துகள் தெளிக்கப்படவேண்டும்
  • நோய் தாங்கிகளாகச் செயல்படும் விலங்குகளை பண்ணையில் தனிமைப்படுத்தி, வெளியேற்றிவிட வேண்டும்
  • பண்ணையிலுள்ள அனைத்து மாடுகளுக்கும் ஊநீர் பரிசோதனைகள் செய்து,அந்த பரிசோதனைகளின் மூலம் நோய் கண்டறியப்பட்ட மாடுகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும்
  • செம்மறியாடுகள் மற்றும் மாடுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட அனபிளாஸ்மோசிஸ் நோய்க்கான தடுப்பூசிகளை மாடுகளுக்கு நோய் தடுப்புக்காக  போடலாம்

top

தைலீரியாசிஸ்        

   இந்நோயினைப்பற்றி

   நோயின் தன்மை  
  • தைலீரியோசிஸ் கலப்பின மற்றும் வெளிநாட்டின மாடுகளைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும்

    இந்நோய்க்கான காரணங்கள்
  • தைலீரியா ஆனுலேட்டா,தைலீரியா பார்வா எனும் நோய்க்கிருமிகள் மாடுகளைத் தாக்கி தைலீரியோசிஸ் நோயை ஏற்படுத்துகின்றன
  • தைலீரியா ஆனுலேட்டா வெப்பமண்டல நாடுகளிலுள்ள மாடுகளில் தைலீரியோசிஸ் நோயை ஏற்படுத்துகிறது

   நோய் பரவும் முறை  
  • இந்நோய் பொதுவாக வெயில் காலங்களிலும் மழைக்காலங்களிலும் மாடுகளைக் தாக்குகிறது
  • மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இந்நோயினைப் பரப்பும் உண்ணிகளின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் நோயி்ன் தாக்கமும் அதிகமாகும். தவிரவும் வெயில் காலங்களிலும் மழைக்காலங்களிலும் ஏற்படும் அதிகப்படியான அயற்சியாலும் மாடுகள் இந்நோயால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றன
  • ஹைலோமா எனும் உண்ணிகளால் இந்நோய் பரவுகிறது
  • இரத்தசிவப்பணுக்களில் இருக்கும் இந்நோய்க்கிருமி  உண்ணிகளின் லார்வா மற்றும் நிம்ப் வளர்நிலைகள் பாதிக்கப்பட்ட மாடுகளின் இரத்தத்தை உறிஞ்சும்போது நோய்கிருமியை எடுத்துக்கொண்டு நோயைப் பரப்புகின்றன
  • பிறகு இந்த உண்ணிகள் மற்ற மாடுகளைக் கடிப்பதால் நோய் பரவுகிறது
  • பாதிக்கப்பட்ட மாடுகளி்ன் இரத்தத்தையோ அல்லது மண்ணீரல், நிணநீர்க் கட்டிகள் மற்றும் கல்லீரல் போன்றவற்றின் திசுக்களையோ இதர மாடுகளுக்கு செலுத்தும்போதும்இந்நோய்க்கிருமி பரவுகிறது

   அறிகுறிகள்

    நோயின் அறிகுறிகள்
  • அதிகக் காய்ச்சல்
  • மாடுகளின் உடலின் மேற்புறத்திலிருக்கும் நிணநீர்க் கட்டிகள் வீங்கிக் காணப்படுதல்
  • நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகள் தீவனம் எடுக்காமல், தோல் வறண்டு, அமைதியின்றிக் காணப்படுதல்
  • கண்களில் நீர் வடிதல்
  • பாதிக்கப்பட்ட மாடுகள் மூச்சு விட சிரமப்படுவதுட்ன், மூக்கிலிருந்து சளி வடிதல்மற்றும் இருமல்
  • மாடுகள் சோர்வாக காணப்படுதல். பாதிக்கப்பட்ட மாடுகளின் கண்களின் உட்சவ்வில் இரத்தத்திட்டுகள் காணப்படுதல்
  • காய்ச்சல் குறைந்தவுடன் இரத்த சோகை ஏற்பட்டு சிறுநீரின் நிறம் மாறுதல்
  • பாதிக்கப்பட்ட மாடுகளின் தோலில் சிவந்த திட்டுகள் காணப்படுதல்
  • மாடுகள் தளர்வாகக் காணப்பட்டு இறந்துவிடுதல்





   மேலாண்மை முறைகள்

   நோயினைக் கட்டுப்படுத்துதல்  
  • உண்ணிகளைக் கட்டுப்படுத்துதல்
top